இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
காரைக்குடி கோட்டத்தில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெறுவதால் இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
காரைக்குடி,
காரைக்குடி கோட்டத்தில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெறுவதால் இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மின்கம்பம் மாற்றும் பணி
காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் - ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம்,எச்.டி.சி. பீடரில்-ஆறுமுக நகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரி நகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி.
கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில், கானாடுகாத்தான் பீடரில் - கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப்பொய்கை, நெற்புகப்பட்டி நேமத்தான்பட்டி.
கல்லல்
கல்லல் துணை மின் நிலையத்தில், சாத்தரசம்பட்டி பீடரில்- கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, சாக்கவயல் துணை மின் நிலையத்தில், பெரியகோட்டை பீடரில் - வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை, மித்ராவயல் பீடரில் -சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர்.
தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் - உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம்.கண்ணங்குடி பீடரில்- கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.