விருதுநகர் ராமமூர்த்தி ரோடு வழியாக புதைவட கேபிள் மூலம் மின்வினியோகம் செய்யப்படும் நிலையில் விருதுநகர் நகராட்சிக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடக்க உள்ளது. இதனால் நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு, ெரயில்வே பீடர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அம்பேத்கர் தெரு, இளங்கோவன் தெரு, ரோசல்பட்டி ரோடு, ஏ.எஸ்.எஸ்.எஸ். ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.