சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம், பேரளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.
எசனை, கிருஷ்ணாபுரம்
பெரம்பலூர் கிராமியத்துக்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோன்று கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார் (சிறுவாச்சூர்), செல்வராஜ் (பெரம்பலூர் கிராமியம்), மாலதி (கிருஷ்ணாபுரம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.