புலியூர், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக புலியூர், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நாளை(திங்கட்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
பள்ளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பீடர், கருங்கல்பட்டி நிலையத்திற்குட்பட்ட குளத்தூர் பீடர், ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட காங்கேயம்பாளையம் பீடர், நொய்யல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அத்திபாளையம் பீடர் மற்றும் ராஜபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் பீடர் ஆகிய பீடர்களில்நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் லட்சுமிபுரம், காங்கேயம்பாளையம், வேலாயுதம்பாளையம், சாலிபாளையம், டி.வெங்கிடாபுரம், சின்னதாராபுரம், அணைபுதூர், ரெங்கபாளையம், காளிப்பாளையம், வேலன்செட்டியூர், கஞ்சமாரன்பட்டி, அண்சாகவுண்டனூர், ஆண்டிபட்டி காலனி, மண்மாரி பகுதி, மணமேட்டுபட்டி, நெல்லிக்கொம்பை, சின்னகுமாரபாளையம், பெரியமஞ்சுவெளி, செம்பாறைபட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளைகாலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புலியூர்
இதேபோல் கரூர் கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணைமின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஏ.பி.நகர் வீரராக்கியம், பி.வெள்ளாபட்டி, ஏமூர்புதூர், குன்னனூர், வடக்குபாளையம், மூலக்காட்டனூர், புலியூர், கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குப்பாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை மற்றும் புலியூர் ஏ.பி.நகர், காளிபாளையம். ஆண்டிபாளையம், லிங்கத்தூர், கருப்பம்பாளையம், சரளப்பட்டி, உப்பிடமங்கலம், குளத்துப்பாளையம், வீரராக்கியம், ஆர்.எஸ்.பாலராஜபுரம், சின்னமாநாயக்கன்பட்டி, கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.