எடமலைப்பட்டிபுதூரில் நாளை மின் நிறுத்தம்

எடமலைப்பட்டிபுதூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

Update: 2023-03-16 19:54 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பாப்பாகாலனி பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மதுரைரோடு எடமலைப்பட்டிபுதூர், அந்தோணியார்கோவில்தெரு, வடக்கு-தெற்கு, மேட்டுதெரு, நல்லதண்ணி கேணிதெரு, சாந்திநகர், காளியம்மன்கோவில்தெரு, கொல்லாங்குளம், பாரதிநகர், பாப்பாகாலனி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்