நாளை மின் நிறுத்தம்
திருமக்கோட்டை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.