நாளை மின்சாரம் நிறுத்தம்
பரமத்திவேலூரில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பரமத்திவேலூர்
வேலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.