கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட புளியங்குடி, வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் புளியங்குடி, சிந்தாமணி, ஐயாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வெண்டிலிங்கபுரம், திரிவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவகுறிச்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.