நாளை மின்தடை

திருவேங்கடபுரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-07-10 19:41 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையம் பகுதியில் அர்பன் பீடர், ஆறுமுகம் மில் பீடர், வடக்கு இண்டஸ்ட்ரியல் பீடர் ஆகிய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆதலால் திருவேங்கடபுரம், அட்டை மில் முக்குரோடு, சங்கம்பட்டி, சட்டிக்கிணறு, அண்ணாநகர், ராமலிங்கபுரம் ரோடு, முதுகுடி, கோதை நாச்சியாபுரம், அப்பனேரி, பண்ணைக்காட்டு பகுதி, கீழ ஆவரம்பட்டி, கட்டபொம்மன் தெரு, செவல்பட்டி தெரு, காமராஜ் நகர், டி.பி. மில்ஸ் ரோடு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, மாடசாமி கோவில் தெரு, பெரிய கடை பஜார், தாலுகா ஆபிஸ், நீதிமன்றம், மாலையாபுரம், ராம் நகர், தாட்கோ காலனி, சக்தி நகர், மருதுநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை(செவ்வாய்க்கிழமை) 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்