குறிஞ்சிப்பாடி
நெய்வேலி அடுத்த வடக்குத்து துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வடலூர், வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம், கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம், எல்லப்பன் பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூர், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தெரிவித்துள்ளார்.