வத்திராயிருப்பு, கொடிக்குளத்தில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிக்காக வத்திராயிருப்பு, கொடிக்குளத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையபட்டி, துலுக்கப்பட்டி கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சொக்கம்பட்டி, லட்சுமிபுரம், மூவரைவென்றான், புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார் குளம், தொட்டியபட்டி, பிளவுக்கல் அணை, கான்சாபுரம், பட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், புதுப்பட்டி, கோட்டையூர், அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, சுந்தரபாண்டியம், கோட்டையூர், தைலாபுரம், கொடிக்குளம், கூமா பட்டி, கிழவன் கோவில், ராமசாமிபுரம், கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்து உள்ளார்.