திருச்சுழி, துலுக்கப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சுழி, துலுக்கப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-09-16 18:46 GMT

திருச்சுழி

திருச்சுழி, துலுக்கப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள்

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட தமிழ்பாடி துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

மின்தடை

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர் முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.குமாரலிங்கபுரம், இ.முத்துலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூர், மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, ஒண்டிப்புலிநாயக்கனூர், கணபதி மில் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்