ஊ.மங்கலம், கம்மாபுரம், குப்பநத்தம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஊ.மங்கலம், கம்மாபுரம், குப்பநத்தம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மின்சார வாரிய கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான, ஊ.மங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அரசக்குழி, ஊ.கொளப்பாக்கம், குப்பநத்தநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும், சிறுவரப்பூர் துணை மின் நிலையத்தில் சு.கீணனூர், கம்மாபுரம், கோபாலபுரம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கும் விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவல் மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.