இன்று மின்சாரம் நிறுத்தம்

காந்தி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், அரியமங்கலத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-06-03 18:40 GMT

திருச்சி, ஜூன்.4-

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

இ.பி.ரோடு துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட இ.பி.ரோடு, மணிமண்டப சாலை, காந்திமார்க்கெட் கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியார்தெரு, ஆண்டாள்தெரு, பட்டவர்த்ரோடு, கீழஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேஷன், விஸ்வாஸ்நகர், ஏ.பி. நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் திருச்சி கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுரெட்டிதெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன்கோவில் தெரு, பக்காளிதெரு, மத்திய பஸ்நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டர் சாலை, எஸ்.பி.ஐ. காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம்சாலை, பட்டாபிராமன்சாலை, புத்தூர் நான்குவழிச்சாலை, கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல்மாரியம்மன் கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ்சாலை, லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன்காலனி, ஈ.வே.ரா. சாலை, வயலூர்சாலை, பாரதி சாலை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அரியமங்கலம் எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர் ஒரு பகுதி, மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், செந்தண்ணீர்புரம், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்