இன்று மின் நிறுத்தம்
மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
மன்னார்குடி,
மன்னார்குடி நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சா.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.