இன்று மின்சாரம் நிறுத்தம்
ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மொரப்பூர்
கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எலவடை, மருதிப்பட்டி, மேட்டுவலசை, எம்.வெள்ளாளப்பட்டி, எம்.வெளாம்பட்டி, ஆர்.எஸ்.தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூத்தம்பட்டி, கூச்சனூர், பள்ளிப்பட்டி, சுண்டக்காப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சனாம்பட்டி, கதிரம்பட்டி, சாமாண்டஅள்ளி மற்றும் கே.ஈச்சம்பாடி பேப்பர் மில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.