இன்று மின்சாரம் நிறுத்தம்

தரங்கம்பாடி, பொறையாறு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-09-04 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் இடங்களான சாத்தங்குடி, தரங்கம்பாடி, பொறையாறு எருக்கட்டாஞ்சேரி, காத்தான் சாவடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி, டி.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், கண்ணப்பமூலை, ஆனைக்கோவில், திருமெய்ஞானம், பி.பி.நல்லூர், மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் மின் நிறுத்தம் செய்வது, மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்