இன்று மின்சாரம் நிறுத்தம்
ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை, ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மன்னார்சாமி தெரிவித்தார்.