வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி துணை மின் நிலையத்தின் மூலம் மின்வினியோகம் பெறும் வேலூர் பீடரில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் அதிக திறன் கொண்ட பாலிமர் இன்சுலேட்டர் மாற்றும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி, மேலப்பச்சக்குடி, புதுப்பட்டி, குறிச்சிப்பட்டி, மேப்பூதகுடி தென்னலூர், தொட்டியபட்டி, குளவாய்ப்பட்டி, சூரியூர், பேராம்பூர், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.