வாளாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

வாளாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-02-25 19:38 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

லால்குடி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்