திருவையாறு பகுதியில் மின்நிறுத்தம்

திருவையாறு பகுதியில் மின்நிறுத்தம் வருகிற 30தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-27 20:08 GMT

திருவையாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட விளாங்குடி 11 கிலோ வாட் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பி தரம் உயர்த்தவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் வருகிற 30-ந்ேததி(சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்