தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-11-29 19:12 GMT

திருச்சி நகரியம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை தில்லைநகர் பிரிவுக்குட்பட்ட தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்புகளான தில்லைநகர் 1 முதல் 5-வது குறுக்கு, தில்லைநகர் மேற்கு 1 மற்றும் 2 வது குறுக்கு, தேவர் காலனி, அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்