சோமூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
சோமூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மேம்பாட்டுபணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஒத்தக்கடை, சோமூர், வேடிச்சிபாளையம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், திருமுக்கூடலூர், நெரூர் அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மரவாப்பாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், பதினாறுகால் மண்டபம், செல்லிபாளையம், கோயம்பள்ளி, பெரியகாளிபாளையம், சின்ன காளிப்பாளையம், சேனப்பாடி, மல்லாம்பாளையம், முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.