செந்துறை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
செந்துறை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, நக்கம்பாடி, இலங்கைச்சேரி, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கன், நாகல்குழி, உஞ்சினி, சிறுகடம்பூர், நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன் ஆத்தூர், பெரும்பாண்டி, நல்லநாயகபுரம், வஞ்சினபுரம் ஆகிய பகுதிகளில் இன்றுகாலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.