எஸ்.புதூர், காளையார்கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

எஸ்.புதூர், காளையார்கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

Update: 2023-09-19 18:45 GMT

எஸ்.புதூர்

திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணைமின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுகுடிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காளையார்கோவில், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, பெரிய கண்ணனூர், கருங்காலி, ஒய்யவந்தான், மேப்பல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என காளையார் கோவில் உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்