புதுக்கோட்டை, கீரனூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதுக்கோட்டை, கீரனூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-15 18:58 GMT

புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், அரசு மருத்துவமனை பின்புறம், தெற்கு 4-ம் வீதி, (முருகன் கோவில் முதல் அண்ணா சிலை வரை), கீழராஜவீதி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், பாலாஜி நகர், சின்னப்பா நகர், நிஜாம் காலனி, சக்தி நகர், திருநகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும், புதுக்கோட்டை நகர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் குளத்தூர் துணை மின் நிலையத்தில் கீரனூர் பஜார் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கீரனூர் பேரூராட்சி பகுதிகளான பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், 4 ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, ஜெய்ஹிந்த் நகர் மற்றும் ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்