பேரூர், நெம்மேலி பகுதிகளில் நாளை மின்தடை

உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

Update: 2022-09-12 10:18 GMT

கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால் அன்றைய தினம் சூலேரிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மறைமலைநகர் கோட்ட பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்