முதுகுளத்தூர் பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக முதுகுளத்தூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-06-29 19:01 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீரனூர், நல்லூர், ஆத்திகுளம், மணலூர், முதுகுளத்தூர் நகர், கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆர்.பட்டிணம், காக்கூர், புளியங்குடி ஆதனக்குறிச்சி, காத்தாகுளம் மற்றும் இதை சுற்றியுள்ள இடங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்