குள்ளஞ்சாவடி, கோரணப்பட்டு பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

குள்ளஞ்சாவடி, கோரணப்பட்டு பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-08 20:15 GMT

குள்ளஞ்சாவடி, கோரணப்பட்டு, தோப்புக்கொல்லை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதூர், வள்ளுவர் காலனி, காரைக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மேலும் கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டு சாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேயக்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை குறிஞ்சிப்பாடி மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்