குன்றாண்டார்கோவில் பகுதியில் நாளை மின்தடை
குன்றாண்டார்கோவில் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களுர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கத்தம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினிேயாகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.