திருப்பரங்குன்றம்-நிலையூர் சாலையில் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு

திருப்பரங்குன்றம்-நிலையூர் சாலையில் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு

Update: 2022-11-12 20:17 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள நிலையூர் சாலையில் கனமழைக்கு திடீரென்று மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது டிரான்ஸ்பார்மர் மீது மரத்தின் கிளைகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீஸ் சப்-இன்பெக்டர் முருகன், போக்கு வரத்து பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். மின் ஊழியர்கள் டிரான்ஸ் பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்