பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் 17-ந் தேதி மின்தடை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் 17-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
நெல்லை நகர்புற மின்கோட்டத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின்நிலையங்களில் 17-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் தியேட்டர் பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ்நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி,
மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேல கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைகுளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், என்.ஜி.ஓ.காலனி, அன்புநகர், மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரை செல்வி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்து உள்ளார்.