மாணவர்களுக்கு கலை-இலக்கிய போட்டி

Update: 2023-01-08 15:39 GMT

மாணவர்களுக்கு கலை-இலக்கிய போட்டி

திருப்பூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, காங்கயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை-இலக்கியத் திறனாய்வு போட்டிகள் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா- 2023, வரும் 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி வரை திருப்பூர் மாநகரில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கவிதை, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட கலை, இலக்கியப் போட்டிகள் காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 1 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 174 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருப்பூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி பிரபு செபாஸ்டியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்