ஊரக திறனாய்வு தேர்வு 17-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
நாளை நடைபெறுவதாக இருந்த ஊரக திறனாய்வு தேர்வு 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"10.12.2022 (நாளை) நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 17.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.