பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் புதிய மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் புதிய மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் புதிய மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை
திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை இன்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் திருவண்ணாமலை பெண்கள் மற்றும் ஆண்கள், நல்லவன்பாளையம், மல்லவாடி, மங்கலம், தச்சம்பட்டு, சு.வாளாவெட்டி உள்ளிட்ட 7 அரசினர் விடுதிகள் இயங்கி வருகிறது.
இதில் 2023-24-ம் கல்வியாண்டில் 365 புதிய மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்விற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பிரியா விஜயரங்கன், இல.சரவணன், மங்கலம் பிரபாகரன், காலேஜ் கு.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பு
அப்போது அவர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் குறைவாக வந்ததால் கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதனையேற்ற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், விடுதிகளில் முழுமையாக மாணவர் சேர்க்கை நடைபெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாணவர் சேர்க்கையை ஒத்தி வைத்தார்.