தலைமை தபால் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

தலைமை தபால் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-12 19:15 GMT

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியாபட்டியில் உள்ள தபால் நிலையத்தில் தலைமை தபால் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன் (வயது 55). இவர் அருப்புக்கோட்டை கருப்பையா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. முருகன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தனது அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டி விட்டு நீண்டநேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சசிகலா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்