ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போஸ்டர்கள்

வத்தலக்குண்டுவில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Update: 2022-07-07 16:56 GMT

வத்தலக்குண்டு நகரின் முக்கிய இடங்களில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை புகழ்ந்து பேசிய ஓ.பி.எஸ்., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை பாராட்டிய ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா என்றுமே உங்களை மன்னிக்காது என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அந்த போஸ்டரில் 30-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் உள்ளன. இந்த போஸ்டர்களால் வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்