ஆ.ராசா பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆ.ராசா பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் நகர தி.மு.க. துணை செயலாளர் முருகேசன் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்துகளை பரப்பி கொலை மிரட்டல் விடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம், நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.