தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-10 15:11 GMT

தபால் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தபால் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தன. அதன்படி கடந்த 4-ந்தேதி, நாடு முழுவதும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்களில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல், தபால்நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தபால் நிலையங்களில் மணியார்டர், பார்சல் சேவை, தபால் பட்டுவாடா, சேமிப்பு மற்றும் தபால் துறை காப்பீட்டில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்