தபால் ஊழியர்கள் பேரணி

அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி தபால் ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.

Update: 2023-08-09 19:08 GMT

இந்திய தாய் திருநாட்டின் 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் சார்பில் நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு புதுச்சேரி கோட்டத்தின் அஞ்சலக கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை தாங்கினார். பேரணியை விழுப்புரம் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிரேம்நாத், செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் சுதந்திர தினத்தன்று அனைத்து பொதுமக்களும் அவர்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் தபால் நிலைய ஊழியர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது, விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.சாலை வழியாக காந்தி சிலை சென்று மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் தபால் நிலைய அலுவலர்கள் ராஜகோபால், வாசு மற்றும் அனைத்து தபால் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்