அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.

Update: 2023-02-24 18:45 GMT


மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி கிளை தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், முன்னாள் கோட்ட தலைவர் ஊமதுரை, முன்னாள் பொருளாளர் சாருமதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதிதாக கணக்கு தொடங்கச் சொல்லி ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் மீதான தொழிற்சங்க விரோதப்போக்கை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்