பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் பூட்டி 'சீல்' வைப்பு
தடை செய்யப்பட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தை எதிரே உள்ள வணிக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள ஒரு அறையில் வாடகைக்கு செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்தை நேற்று மதியம் ஆர்.டி.ஓ. நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் பூட்டி 'சீல்' வைத்தார்.