மக்காச்சோளக் கதிர்களை மயில்கள், கிளிகள் சேதப்படுத்தி வருவதால் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மக்காச்சோளக் கதிர்களை மயில்கள், கிளிகள் சேதப்படுத்தி வருவதால் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2022-12-30 16:44 GMT

போடிப்பட்டி,

மக்காச்சோளக் கதிர்களை மயில்கள், கிளிகள் சேதப்படுத்தி வருவதால் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். முட்டைகளை தின்னும் குள்ள நரிகளின்எண்ணிக்கை குறைந்ததால் மயில்களின்எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

அறுவடைக்கு தயார்

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் நடப்பு சீசனில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளக் கதிர்கள் பெருமளவு அறுவடைக்குத் தயாராகி விட்டன. மேலும் பல பகுதிகளில் கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளன. இந்தநிலையில் மக்காச்சோளக் கதிர்களை மயில்கள் அதிக அளவில் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்த விவசாயிகள் கூறியதாவது:-

மயில்கள்

இந்தநிலையில் பறவைகள் அதிக அளவில் மக்காச்சோளக் கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன.கிளிகள் சேதப்படுத்துவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. எனவே கிளிகளின் உணவுக்கென மகசூலின் ஒரு பகுதியை ஒதுக்க விவசாயிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி விட்டது. இதனால் அவற்றால் ஏற்படுத்தப்படும் சேதங்களும் அதிக அளவிலேயே உள்ளது. கூட்டம் கூட்டமாக விளை நிலத்துக்குள் வரும் மயில்கள் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கதிர்களை கொத்தி சேதப்படுத்துகின்றன. அவை ஒவ்வொரு கதிரிலும் சிறிதளவு சேதம் உண்டாக்கி மணிகளை தின்று விட்டு சென்று விடுகிறது.

ஆனால் அந்த கதிரில் மழைநீர் உள்ளிறங்கி கரும் பூஞ்சானம் உருவாகி கதிர் வீணாகி விடுகிறது.இதனால் அதிக மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.மயில்கள் நமது தேசிய பறவை என்பதுடன் பாதுகாக்க வேண்டிய பறவை இனமாக இருப்பதால் அவற்றை விரட்டவும் அஞ்சும் நிலை உள்ளது. எனவே மயில்களைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்களின் குஞ்சுகள் மற்றும் முட்டைகளை உணவாக்கும் குள்ள நரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மயில்களின் இனப்பெருக்கம் மிகவும் அதிக அளவில் உள்ளது. இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய சவாலாக மயில்கள் உருவெடுக்கும் அபாயம் உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்