பழுதடைந்த சாலை சீரமைப்பு

கோத்தகிரியில் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-25 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் வழியாக செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக, சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். இதையடுத்து கோத்தகிரி நுகர்வோர் சங்க நிர்வாகிகள், பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து சாலையை புதுப்பிக்க வேண்டும் அல்லது பராமரிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி, பேரூராட்சி ஊழியர்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம் முதல் பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் இருந்த குழிகளை கான்கிரீட் மூலம் மூடி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்