பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வறுமை நிலையில் ஏழை மக்கள் - கே.எஸ்.அழகிரி

பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏழை-எளிய மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தள்ளார்.

Update: 2022-08-11 10:53 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை-எளிய மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் நிலவரப்படி, அதற்கு முந்தைய 6 மாதத்தில் 88.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது, ரூ.17.6 லட்சம் கோடி சொத்து குவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு நண்பரான முகேஷ் அம்பானியின் சொத்து 13.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அம்பானிக்கும், அதானிக்கும் நடைபெறுகிற வணிகப் போட்டியில் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவின் காரணமாக உலக பணக்காரர்களில் 4-வது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கவுதம் அதானி கைப்பற்றியிருக்கிறார். இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பா.ஜ.க.வின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளன. இதை 8 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனை என்பதா ? மெகா ஊழல் என்பதா ?

எனவே, சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற அதேநேரத்தில், இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது? என்று ஆய்வு செய்கிறபோது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது. இத்தகைய அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது. இந்த கடமையை உணர்ந்து பா.ஜ.க.விடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் இதற்கான முயற்சிகளில் அனைத்து மக்களும் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்