வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை

வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-08-19 17:31 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக வடுகபைரவர் உள்ளார். இந்த கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து வடுக பைரவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று விபூதி காப்பு அலங்காரத்தில் மலர் மாலைகள் சூட்டப்பட்டு வடுக பைரவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசித்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்