ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: மண்டைக்காடுகோவிலில் பொங்கல் வழிபாடு

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி மண்டைக்காடுகோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது.

Update: 2022-07-17 17:40 GMT

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் திரளான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். நேற்று ஆடி முதல் நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர். இதனால் கோவில் மற்றும் பொங்கலிடும் பகுதியில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்