ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
ஏ.கே.மோட்டூர் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே.மோட்டூர் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரன், முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் காஞ்சனா சிவப்பிரகாசம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவர் விஜயா அருணாச்சலம் கலந்து கொண்டு தமிழக அரசு வழங்கிய ரூ.1,000, மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், ஆவின் இயக்குனர் சின்னப்பையன், பெருமாள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.