பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்

வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது.

Update: 2023-01-03 17:17 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்த பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,20,457 ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்