பொங்கல் தொகுப்பு: முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசுத் தொகுப்பு, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை,
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு ,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த்து.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .